சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தன்னுடன் இருந்த புகைப்படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் உள்துறை அமைச்சரான அலைன் பெர்செட் தன்னுடன் இருந்த புகைப்படம் மற்றும் தனக்கு எழுதிய கடிதங்களை வெளியிட்டு விடுவதாக பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவ்வாறு வெளியிடாமல் இருக்க அவர் ஒரு லட்சம் ஸ்விச் பிராங்குகள் கொடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண் பெர்செடின் முன்னால் காதலி எனவும் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆனால் இது உள்துறை அமைச்சரின் தனிப்பட்ட விவகாரம் என்பதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் தனது அதிகாரங்களையும் பதவியையும் பயன்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கை கையாளுவதற்கு சுவிஸர்லாந்தின் அபாய ஆபரேஷனை மேற்கொள்ளும் போலீஸ் பிரிவை பெர்செட் பயன்படுத்தியதாகவும் மேலும் அமைச்சகத்தின் பெரும் பொறுப்பில் இருக்கும் செகரட்டரி ஜெனரலை இந்த வழக்கில் ஈடுபடுத்தி பெண்ணை கைது செய்ய வைத்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஸ்விஸ் நாடாளுமன்றம் அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்டதா? மேலும் இந்த வழக்கு தவறாக கையாளப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகிறது.