Categories
தேசிய செய்திகள்

காப்பாத்துங்க காப்பாத்துங்க… விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்… என்ன உலகம்டா இது…!!!

விபத்தில் சிக்கிய தாய் மற்றும் மகனை காப்பாற்றாமல் பொதுமக்கள் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழ்நாடு தர்மபுரி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு தீக்‌ஷித்  என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இவர்கள் பெங்களூர் கே ஆர் புரம் பகுதியில் வசித்து வருகின்றனர். அங்கு சிவகுமார் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சிவகுமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது மாரத்தஹள்ளி ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் மனைவி மற்றும் குழந்தை தவறி கீழே விழுந்தனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ஸ்ரீதேவி, தீக்‌ஷித் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்த சிவக்குமார் குழந்தை மற்றும் மனைவியை மடியில் போட்டுக்கொண்டு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதுள்ளார். ஆனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் இதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். சிலர் இதனை செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இதற்கிடையில் சிறிது நேரத்தில் ஸ்ரீதேவியும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர் இந்த சம்பவம் காண்போர் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. இதை பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று ஸ்ரீதேவி மற்றும் குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிவகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நாட்டுமக்களுக்கு மனிதாபிமானம் என்பது வரவர இருக்கின்றதா? இல்லையா ?என்பது கேள்விக்குறியாகவே உள்ளது

Categories

Tech |