வீடு புகுந்து நகை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வல்லவன்கோட்டை பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பெருமாள் கடந்த 23-ஆம் தேதி தனது தோட்டத்தில் பூக்களை பறித்து விட்டு விற்பனைக்காக பூ மார்க்கெட்டில் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பெருமாள் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பெருமாள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.2 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பெருமாள் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் பிச்சையா என்பதையும் ராஜரத்தினத்தை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்த தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.