நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாகக் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். இதனையடுத்து நீதிமன்ற காவல் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நிலையில், ஆர்யன் கான் தரப்பில் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆரியன் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஆர்யன் கானை அவருடைய தந்தை நடிகர் ஷாருக்கான் சிறையில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில்செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், இஸ்லாமியர் என்பதற்காக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்தது அதிகார அத்துமீறல் என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆர்யன் கானை பிணையில் விடுவிக்க, எதிர்ப்பு தெரிவிக்கும் போதை பொருள் தடுப்பு பிரிவு போதை விருந்து நடந்ததாக சொல்லப்படும் கப்பல் நிர்வாகிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.