ஆண் பெண் இருவருக்கும் இடையிலான திருமணம் மட்டுமே செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமண சட்டத்தின் கீழ் ஓரின திருமணங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி டிஎன் படேல் மற்றும் நீதிபதி ஜோதி சிங் ஆகியோரின் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கு தொடர்பாக வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உயிரியல் என்பது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் மட்டுமே இருக்க முடியும் என்று கூறி ஓரினசேர்க்கை குற்றமற்றது என்று கூறினாலும் ஆண் பெண் திருமணம் மட்டுமே செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளார்.