Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட தொல்லை… சிறுவன் செய்த காரியம்… போக்சோவில் கைது செய்த போலீஸ்…!!

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 17 வயது சிறுவன் பள்ளிப்படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுத்த நிலையில் விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று இரவு மாணவி வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த சிறுவன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைதொடர்ந்து மாணவி அச்சமடைந்து சத்தம்போட்டதால் சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். இதுகுறித்து மாணவி மற்றும் அவரது பெற்றோர் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Categories

Tech |