சுற்றுலா சென்றபோது காரை திருடி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் தனது உறவினர் காரில் அவரது நண்பர் முருகேசன் என்பவருடன் கொடைக்கானலுக்கு கடந்த 23 ஆம் தேதி சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு சுற்றுலாவை முடித்துவிட்டு மீண்டும் காரில் தேனிக்கு திரும்பியுள்ளனர். இந்த காரை பூமலைக்குண்டு பகுதியை சேர்ந்த டிரைவர் குரு பாலன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இதனையடுத்து வத்தலகுண்டு-கொடைக்கானல் சாலையில் சென்று கொண்டிருந்தபோது டிரைவர் குருபலன் காரில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக கூறியுள்ளார். எனவே பெட்ரோல் வாங்கி வருமாறு மகேந்திரன் மற்றும் முருகேசனிடம் கேட்டுள்ளார். இதனை நம்பிய இருவரும் பெட்ரோல் வாங்குவதற்காக சென்று மீண்டும் பெட்ரோல் வாங்கி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது கார் அந்த இடத்தில் இல்லை.
மேலும் டிரைவர் குருபாலனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கார் திருடுபோனது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து மகேந்திரன் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் குருபாலனையும் அவர் திருடி சென்ற காரையும் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன கார் ஜி.கல்லுப்பட்டி அருகே நின்று கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குருபாலனை கைது செய்து காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.