தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இலியானா, அங்கு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். ‘கேடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இலியானா. அதன்பின் விஜய்க்கு ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தார். பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் இவர், தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்கிறார்.
நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் தவறாமல் ஏதாவது அப்டேட் செய்வதை பொழுதுபோக்காகவே கொண்டுள்ளார் இலியானா. இதனிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நீண்ட நாட்களாக டேட் செய்துவந்த நிலையில் திடீரென காதல் முறிவு ஏற்பட்டது. இதன் பின் தனது காதலனை குறித்து பொது வெளியில் ஏதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்த இலியானா தற்போது பிரேக் அப் குறித்து தெரிவித்துள்ளார்.
அதில், இனிமேல் யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை. இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்..என் வாழ்க்கை முறையை மாற்றி புதிய வழியில் வாழப்போகிறேன். உங்கள் மீது அக்கறையோடு இருங்கள். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சிலநேரம் மற்றவர்களை நம்ப வேண்டி வரும். அந்த நேரத்தில் அவர்களை சார்ந்து இருக்க நினைப்போம். ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நம்மோடு இருப்பார்களா என்பது தெரியாது. நம்மை பற்றி யோசிக்க வேண்டும்.
வாழ்க்கையில் எது நடந்தாலும் முதலில் நமக்காக இருப்பது நாம் மட்டும்தான். அதனால் என்மீது நான் அதிக அக்கறை எடுக்கிறேன். என்னை நானே காதலிக்கவும் ஆரம்பித்துள்ளேன். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் என்னை நன்றாக வைத்துக்கொள்கிறேன். இது நமது வாழ்க்கை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.