சூளைமேட்டில் அரசு புறம்போக்கு நிலம் 2,500 சதுர அடியை ஆக்கிரமித்து மன்சூர் அலிகான் வீடு கட்டுவதாக மாநகராட்சி அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு சீல் வைத்தனர். இந்த நிலையில் தன்னுடைய வீட்டுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் வைத்துள்ள சீலை அகற்றக்கோரி அவருடைய மனைவி அபிதா பானு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், எந்த ஒரு மின் முன் அறிவிப்பும் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற்றியது சட்டவிரோதம். தங்களுடைய உடமைகள் மட்டும் அல்லாமல் இரண்டு வெளிநாட்டு பூனைகளையும் வைத்து அதிகாரிகள் பூட்டி விட்டதால் அவை உணவின்றி தவிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.