Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. தம்பதியினரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கணவன்-மனைவி இருவரும் தீக்குளித்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெருவளையம் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அலமேலு என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதில் இருவரும் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

அதன்பின் அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சங்கர் மற்றும் அலமேலு ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |