Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற லாரி டிரைவர்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… மர்மநபர்களுக்கு வலைவீச்சு…!!

லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள வடுகப்பட்டியில் மீனாட்சி முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சக்கம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். இதனையறிந்த மர்மநபர்கள் மீனாட்சி முத்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

இதனையடுத்து பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். இதனைதொடர்ந்து மீனாட்சி முத்து வீட்டிற்கு சென்றபோது பூட்டு உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் நகை திருடு போனதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவவர் தென்கரை  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |