சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். இந்த காரியாபட்டி பகுதிக்கு அருகே விவசாய நிலம் அமைந்துள்ளது.
இங்கு விவசாயிகள் பொருட்கள், உரங்கள் கொண்டு செல்ல மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த சாலையானது போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. அதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.