ஏழைத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சொந்த வீடு இல்லாத ஏழை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குமாறு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் தேவதாஸ் தலைமை தாங்கியுள்ளார்.
இந்நிலையில் நூற்றுக்கும் அதிகமான நபர்கள் கலந்துகொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தங்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.