விஜய்க்கு நன்றிக்கடன் பட்டுளேன் என வேலாயுதம் பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ”வேலாயுதம்”. இந்த படத்தில் ஹன்சிகா, சரண்யா மோகன், ஜெனிலியா, சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அண்ணன் தங்கை உறவை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், வேலாயுதம் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிவிட்டது என தெரிவித்துள்ளார். மேலும்,”சொன்னா புரியாது சொல்லுக்குள்ள அடங்காது நீங்கள்லாம் எம்மேலயும் வச்ச பாசம்” என குறிப்பிட்டு, நடிகர் விஜய் மீது நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சொன்னா புரியாது
சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கள்லாம் எம்மேலயும் வச்ச பாசம் ❤️
Always Indebted for the love of dear @actorvijay and his ever loving fans 🤗#10yearsofVelayudham@geneliad @vijayantony @silvastunt pic.twitter.com/BfMKCQ7SIU— Mohan Raja (@jayam_mohanraja) October 26, 2021