ரேஷன் அரிசியை ரயிலில் கடத்த முயன்ற 4 நபர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஜோலார்பேட்டை ரயிலில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் பாசஞ்சர் ரயிலில் ஏற்றிய போது காவல்துறையினர் விரைந்து சென்று மூன்று பெண்கள் உள்பட 4 நபர்களை கைது செய்துள்ளனர்.
அதன்பின் அவர்களிடம் இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை விசாரணை செய்ததில் அவர்கள் ஜெயா, பூங்கோடி, சதிஷ், சசிகலா என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.