Categories
அரசியல் தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இழுபறி ஜனாதிபதி ஆட்சி ? பரபரப்பு நகர்வுகள் …!!

மராட்டியத்தில் சட்டமன்றத்தின் ஆயுட் காலம் முடிவுக்கு வந்ததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தபடுமா ? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிகாரப் பகிர்வு குறித்து பாரதிய ஜனதா சிவசேனா இடையிலான மோதலால் அம்மாநில ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இந்நிலையில் தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதாவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறுகையில் 105 இடங்களை பிடித்த பாரதிய ஜனதா கட்சியினர் பகத் சிங்க் கோஷியரி  ஏன் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்று வினா எழுப்பினார்.

Image result for maharashtra cm

முன்னதாக மத்திய அமைச்சர் ராம் தாஸ் அத்வாலே மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரை சந்தித்துப் பேசினார். இதனிடையே குதிரை பேரத்தில் சிக்கி விடாமல் இருக்க தமது கட்சி எம்எல்ஏக்கள் அனைவரையும் ஜெய்ப்பூர் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்க காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.ஏற்கனவே மும்பையில் உள்ள ரங்கசர்தா நட்சத்திர ஓட்டலில் சிவசேனா தமது 56 எம்எல்ஏக்களின் தங்க வைத்து அவர்களது நடவடிக்கைகளை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |