Categories
மாநில செய்திகள்

அப்படிலாம் இல்லை…! செலவு சமாளிக்க முடியல… இனி தொடங்க மாட்டோம் …!!

அம்மா உணவகத்தில்  ஆள் குறைப்பு செய்து மூடப்போவதாக தகவல் வந்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என் நேரு, அம்மா உணவகம் ஒரு இடத்திலே 1200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் அந்த இடத்திலே 25 பேர் வேலை செய்கிறார்கள். 25 பேர் வேலை செய்கின்றபோது 7500 சம்பளம் கொடுக்க வேண்டியிருகிறது. அப்படி தொடர்ந்து இந்த மாநகரிலே கூடுதலாக பணியாட்கள் இருக்கின்ற காரணத்தால் அது சம்பளத்தேவை இருப்பவர்களுக்கு தேவையான அளவு கொடுகின்ற அந்த பணி இன்னும் முடியவில்லை.

அதனால் பணியில் இருப்பவர்களை பணியில் இருந்து நீக்கவில்லை. முதல் 10 பேருக்கு முதல் நாளும், இரண்டாவது 10 பேருக்கு இரண்டாவது நாளும் வந்து மாறி மாறி அவர்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். எந்த இடத்திலும் நிற்கவில்லை. கடந்த வாரம் கூட சப்பாத்தி போடுவது நிறுத்திவிட்டார்கள் என்று வந்ததும், முதலமைச்சர் உடனடியாக கூப்பிட்டு நடவடிக்கை எடுக்க சொன்னார்.

அதனால் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை வேறொரு செலவிற்கு எடுத்துவிட்ட காரணத்தால் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. எனவே அம்மா உணவகத்தின் பணியாளர்கள் யாரையும் நீக்கவில்லை. இருக்கிற உணவகங்களுக்கே செலவு செய்வது சிரமமாக இருக்கிறது. புதிய உணவங்கள் எப்படி செயல்படுத்த முடியும். அதெல்லாம் செயல்படுத்த மாட்டாது. அது முதலமைச்சர் முடிவு நான் சொல்ல முடியாது.

மாண்புமிகு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து மாநகராட்சிகளிலும் கால்வாய்கள் தூர்வாரப்பட்டிருக்கிறது. மழைநீர் வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டிருக்கிறது. எனவே இதுவரை எந்தவிதமான பாதிப்பும் இல்லாத அளவிற்கு மாநகராட்சி பணியாற்றி இருக்கிறது.

தொடர்ந்து அந்த பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். அனைத்து மாநகராட்சிகளிலும் மரம் நடும் பணி நடக்கும் மாநகராட்சியில் மட்டுமல்ல நகராட்சி, ஊராட்சி முதற்கொண்டு இதை கொண்டு செல்கிறோம். இந்த மரம் நடும் பணியை முழுமையாக நகராட்சி நிர்வாகத்துறை நிச்சயமாக பேரூராட்சி வரை கொண்டு செல்வோம் என அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |