டி-20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.
இதுகுறித்து விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பத்திரிக்கையாளர் ஒருவர் அடுத்த போட்டியில் மிக சிறப்பான பாமில் இருக்கும்இஷான் கிஷனை அணியில் சேர்க்கப்பட்டு, ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவாரா ? என்று கேட்டார்.
அப்போது விராட் கோலி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஷாக் ரியாக்சன் கொடுத்து இந்த கேள்வியை தெரிந்துதான் கேட்கிறீர்களா என்றும், ரோகித் சர்மா போன்ற அபாரமான ஆட்டக்காரரை நீக்க வேண்டும் என கூறுகிறீர்களா என சிரித்தார். தற்போது இந்தப் பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.