வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள்,ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முஹம்மது ரிஸ்வான் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார்.
20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதையடுத்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்த ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய ரசிகர்கள் மத ரீதியாகவும் ஷமியை வசைபாடினர். இதையடுத்து முகமது ஷமிக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் ஆதரவு குரல் எழுப்பி வந்த நிலையில், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் ஷமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கிரிக்கெட் மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர, பிரிவினையை ஏற்படுத்த கூடாது எனவும், நாட்டுக்காக ஒரு வீரர் செய்யும் தியாகமும், உழைப்பும் அளவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஷமி உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.