Categories
மாநில செய்திகள்

பட்டாசுக்கடையில் தீ விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், தீவிர சிகிச்சையில் இருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதற்கிடையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சரை எ.வ வேலு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Categories

Tech |