அயோத்தி வழக்கில் தீர்ப்பு நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் இறுதி தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது இதையடுத்து எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன இதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்திற்குள் வரும் 13ம் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகள் , அமைச்சர்கள் வாகனங்கள் தவிர்த்து மற்ற வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.