சாதாரண குடிமகனான கெய் கொமுரோவை கரம் பிடித்த ஜப்பான் இளவரசி மாகோ தனது இளவரசி பட்டத்தை துறந்துள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜப்பான் இளவரசி மகோ பொதுமக்களுக்கு மத்தியில் தனது கல்லூரி பருவ காதலனான கெய் கொமுரோவை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இருப்பினும் கெய் கொமுரோவின் தாயார் மோசடி வழக்கு ஒன்றில் சிக்கியதால் இருவருடைய திருமணமும் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஜப்பான் இளவரசி மாகோ தனது காதலனை கரம் பிடித்த நிலையில் அரண்மனையில் இருந்து வெளியேறியுள்ளார்.
இதையடுத்து மகோவின் குடும்பத்தார் அவரை கண்ணீருடன் வழி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாகோ தனது இளவரசி பட்டத்தை துறந்ததோடு பொதுவாக அரச குடும்ப பெண்கள் சாதாரண குடிமகனை மணக்கும் போது அவர்களுக்கு வழங்கப்படும் 1.8 மில்லியன் அமெரிக்க டாலரையும் வாங்க மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மகோ தனது கணவருடன் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.