Categories
உலக செய்திகள்

தகாத உறவினால் ஏற்பட்ட விபரீதம்…. சிறையில் அடைக்கப்பட்ட டிக்டாக் பிரபலம்…. கண்ணீருடன் நிற்கும் குழந்தை….!!

வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்த மனைவியை சுட்டுக்கொன்ற டிக்டாக் பிரபலத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் 29 வயதான Ali Abulaban என்பவர் டிக் டாக் செயலில் அதிக அளவு காமெடி காணொளிகளை பதிவிடுவார். இவரை டிக்டாக்கில் ஒரு மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில் அண்மையில் Aliக்கும் அவரது மனைவியான Anaவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து Ana தனது கணவரான Ali யை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய Ali தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

இதற்கிடையில் ஒருநாள் மனைவி Ana வீட்டில் இல்லாத சமயத்தில் நுழைந்து அவர்களின்  குழந்தையின் ஐபாடில் ஒட்டுக்கேட்கும் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து விட்டு வந்துள்ளார். இதனையடுத்து விடுதியில் தங்கியிருந்த Ali வீட்டில் நடப்பதை அந்த செயலியின் மூலம் ஒட்டு கேட்டு வந்துள்ளார். அப்படி ஒருநாள் கேட்கும் பொழுது அவருடைய மனைவியான Ana வேறு ஒரு ஆணுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த Ali வீட்டிற்கு சென்று அங்கு தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த  Rayburn Cadenas Barron என்பவரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும் அவரின் மனைவியான Anaவையும் சூட்டுக் கொன்றுள்ளார். இதன் பிறகு தன் தாயை அழைத்து அனைத்து உண்மைகளையும் தெரிவித்திருக்கிறார். அதிலும் இருவரையும்  சுட்டுக்கொன்றுவிட்ட பின்பு அங்கிருந்து வெளியேறி பள்ளியில் உள்ள அவரின் குழந்தையை காரில் ஏற்றுக்கொண்டு வந்துள்ளார்.

ஆனால் அதற்குள் இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் Aliயை தொடர்ந்து அவரின் காரை வழிமறித்துள்ளனர். இதனை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்பொழுது குழந்தை தாயையும் தந்தையையும் இழந்து விட்டு தனியாக நிற்கிறது. குறிப்பாக போலீசாரிடம் தன் மனைவி தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக Ali கூறியிருக்கிறார். மேலும் அவரது ஜாமீனை தள்ளுபடி செய்து சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து குழந்தையை காணவும் தடை விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |