போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்குவது தொடர்பான டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் புதிய வழித்தடத்தில் பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்க ஆவின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இனிப்பு வழங்குவதில் எந்தவிதமான தவறும் கிடையாது.
பழைய அரசாங்கத்தில் 262 ரூபாய்க்கு கொடுத்தார்கள். இப்போது நம்முடைய அரசாங்கத்தில் மொத்தத்தில் கொடுப்பதால் டெண்டர் கால் பர் பண்ண வேண்டும் என்பதுதான் முறை. அதை நாம் கடைபிடிக்க வேண்டும். அதன்பிறகு முதலமைச்சர் சொன்னார் ஆவின் நிறுவனத்திடம் கொடுத்துவிடலாம். நம்முடைய அரசு நிறுவனம் என்று சொன்னார். அதனால் ஆவினுக்கு கொடுத்து விடுவோம் என்று ஆவினுக்கு 230 ரூபாய் கொடுத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் போட்டிருக்கும் டெண்டரை பார்க்கும் பொழுது 170 ரூபாய்க்கு தான் போட்டிருக்கிறார்கள். 170 கூடவே வரி 8 ரூபாய் சேர்த்து 178 ரூபாய்க்குத்தான் கொடுக்கிறார்கள். எனவே அவருடைய குற்றச்சாட்டுகள் மிகவும் தவறானது என்று கூறியுள்ளார்.