Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. 50% மானியத்தொகை விடுவிப்பு….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தொடக்க பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளுக்கான மானிய தொகை 50 சதவீதம் விடுவிக்கப்பட்டுள்ளது. அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மானிய தொகை ரூ.77.9 கோடியில் 50% விடுவித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு கிருமிநாசினி வாங்குதல், கழிப்பறை, வகுப்பறை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |