Categories
மாநில செய்திகள்

“வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி” 2 நாளில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்…. தலைமை தேர்தல் அதிகாரி முடிவு….!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி வருகின்ற 29 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நடத்த உள்ளார். ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியலை திருத்தும்பணி நடந்து வருகிறது. இதன்மூலம் 18 வயதை பூர்த்தி அடைந்த அனைவரும் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்ளலாம்.

முகவரி மாற்றம், பெயர் நீக்கம், இடமாற்றம், பெயர் திருத்தம் போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்த வாய்ப்பு வாக்காளர்களுக்கு அளிக்கப்படுகிறது.இது தொடர்பாக விரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்பட்டு 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நவம்பர் மாதத்தில் நடத்தப்படும். இதுபற்றி கருத்து கேட்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் அழைத்துள்ளது.

மேலும் ஆலோசனைக் கூட்டம் திருத்தப்பணி காரணமாக வருகின்ற  29 ஆம் தேதி பகல் 12 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முடிவு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, வாக்காளர் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் நீக்கம் தொடர்பாக அந்தந்த கட்சியின் கருத்துகளை கட்சியின் பிரதிநிதிகள் தெரிவிப்பார்கள்.

Categories

Tech |