Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை ஏற்றம்… வண்டியை விற்று குதிரை வாங்கிய நபர்… நாமும் இப்படி செய்யலாமா?

நாளுக்கு   நாள்   அதிகரிக்கும்   பெட்ரோல்   விலையால்   தெலுங்கானாவில்   விவசாயி  ஒருவர்   தனது   இருசக்கர   வாகனத்தை   விற்று குதிரையை வாங்கி போக்குவரத்துக்காக   தினமும்   பயன்படுத்தி   வருகிறார்.   

கத்வால்   மாவட்டம்   முலகலபள்ளி    கிராமத்தை   சேர்ந்தவர் குர்ரம் நரசிம்மா.   விவசாயியான  இவர்   இவர்   தனது   போக்குவரத்திற்காக   இருசக்கர   வாகனம்   ஒன்று   வைத்திருந்தார்.   ஆனால் நாளுக்கு   நாள்   அதிகரித்து   வரும்   பெட்ரோல்   விலை   காரணமாக   செலவும்   அதிகரித்து   கொண்டே   சென்றது  .

எனவே போக்குவரத்திற்காகவும்   செலவை   கட்டுப்படுத்தவும்   என்ன   செய்யலாம்   என்று   ஆலோசனை   செய்து   அவர்   இறுதியாக   குதிரை வாங்க   முடிவு   செய்தார்.     எனவே   தனது   பழைய   மோட்டார்   சைக்கிளை   22000   ரூபாய்க்கு   விற்றுவிட்டு   அந்த   பணத்தில்   ஆந்திரமாநிலம்  கடப்பா   மாவட்டம்   புரேதட்டில்  உள்ள   தனது    உறவினர்   மூலம்   குதிரை   ஒன்றை   வாங்கினார்.   தினமும்   விவசாயம்     செய்வதற்கு தோட்டத்திற்கு செல்லவும், வெளியூர்களுக்கு செல்லவும் குதிரையை பயன்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில்   அவர் ஆழ்த்தி வருகிறார்.

மோட்டார் சைக்கிளை விட்டுக் குதிரை வாங்கியதை பற்றிக் கூறும் குர்ரம் நரசிம்மா, சிறுவயதில்   இருந்து குதிரையில் செல்ல வேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறியுள்ளார். ஆனால் இரு சக்கர வாகனம் பயன்படுத்தி   வந்ததாகவும், பெட்ரோல் விலை உயர்வால் மாதம் 2000 முதல் 3000 வரை செலவு செய்யும் நிலை கவலை ஏற்படுத்தியதாக அவர்   தெரிவித்துள்ளார்.

தனக்கு   சொந்தமான   விவசாய   நிலத்திலேயே   குதிரையை   மேய்ச்சலுக்கு   விட்டுவிடுவதால்   செலவு   இல்லை என்று     குரம்   நரசிம்மா   கூறியிருக்கிறார்.   போக்குவரத்து   செலவும்   இல்லை   என்று   அவர்   மகிழ்ச்சி   தெரிவித்து   இருக்கிறார். மோட்டார் வாகனங்களுக்கு   பதிலாக   குதிரையை   பயன்படுத்துவதால்   சுற்றுச்   சூழலையும்   பாதுகாக்க  முடியும்   என்று   குர்ரம்   நரசிம்மா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |