Categories
உலக செய்திகள்

துபாயில் கோலாகலமாக தொடங்கிய…. ‘குளோபல் வில்லேஜ் கண்காட்சி’…. 26 உலக நாடுகள் பங்கேற்பு….!!

துபாயில் நேற்று 26 உலக நாடுகள் பங்கேற்ற குளோபல் வில்லேஜ் கண்காட்சி பிரமாண்டமாக தொடங்கியது.

துபாயில் நேற்று பிரபல பொழுதுபோக்கு கண்காட்சியில் ஒன்றான குளோபல் வில்லேஜ் கண்காட்சியின் 26 ஆவது ஆண்டு கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சவுதி, ஏமன் உள்ளிட்ட 26 நாடுகள் அரங்குகள் அமைத்துள்ளது. மேலும், இந்த ஆண்டு புதியதாக ஈராக் நாடும் அரங்கினை அமைத்துள்ளது. இந்த கண்காட்சியில், 80 நாடுகளின் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து குளோபல் வில்லேஜ் கண்காட்சியின் வாடிக்கையாளர் சேவையின் மேலாளரான முகம்மது இசாக் கூறியதாவது, “இந்த கண்காட்சியை காண பல்வேறு உலக நாடுகளின் பொதுமக்கள் குடும்பத்தோடு வருகின்றனர். எனவே, கண்காட்சிக்கு வருகைதரும் பொதுமக்களின் வசதிக்கேற்ப உள்கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பார்வையாளர்கள் வசதியாக அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்வையிடும் வகையில் கூடுதல் இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு கண்காட்சியில் 25 கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதேபோல், இந்த ஆண்டும் பல்வேறு சாதனை நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியின் நேரடி நுழைவு கட்டணம் 20 திர்ஹாமும் (408 ரூபாய்), ஆன்லைன் டிக்கெட்டுக்கு 15 திர்ஹாமும் வசூலிக்கப்படும். தற்போது, எக்ஸ்போ 2020 கண்காட்சி நடைபெறுவதால் வெளிநாட்டு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, உரிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு அடுத்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்” என்று கூறினார்.

Categories

Tech |