தீபாவளியில் சிவகார்த்திகேயன் படம் OTT யில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமரர்பதில், இவர் நடிப்பில் திரையரங்கில் வெளியான படம் ”டாக்டர்”. இயக்குனர் நெல்சன் இயக்கிய இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்து வருகிறது.
இந்த படம் இதுவரை உலக அளவில் 90 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த படம் நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியான நிலையில், நவம்பர் 5ஆம் தேதி OTT தளத்திலும் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.