Categories
Uncategorized மாநில செய்திகள்

கோட்டைப்பட்டினம் மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!!

கைது செய்யப்பட்ட 2 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை விரட்டிய போது, கடலில் படகு மூழ்கியது.. படகு மூழ்கியதில் ராஜ்கிரன் என்ற மீனவர் உயிரிழந்தார்.. மேலும் உயிர் தப்பிய சுகந்தன் (23), சேவியர் (32) ஆகிய 2 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது..

இதற்கிடையே மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக மீனவர்கள், அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதோடு உடலை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.. இதனை தொடர்ந்து உடல் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 2 மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Categories

Tech |