கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் வாரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறை விடப்பட்டது. பின்னர் கடந்த வாரம் சில இடங்களில் மழை பெய்து வந்தது.
தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததை அடுத்து தர்மபுரி மாவட்டத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.