Categories
மாநில செய்திகள்

JUST IN : மோசடி வழக்கு…  விசாரணையில் திருப்தி இல்லை…. உயர் நீதிமன்ற மதுரைக்கிளை..!!!

ஹெலிகாப்டர் பிரதர்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை  தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்களான கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் ஹெலிகாப்டர் பிரதர் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். நிதி நிறுவனத்திற்கு உதவியாக செயல்பட்டதாக செல்வம் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையின் பொழுது விசாரணை அதிகாரி நேரில் ஆஜராகி வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது நீதிபதி புகழேந்தி விசாரணை நிலுவையில் உள்ள போது கணேசனின்  மனைவி கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார். இந்நிலையில் நீதிபதி புகழேந்தி முக்கிய குற்றவாளியான கணேசனின் மனைவிக்கு கீழமை நீதிமன்றம் எப்படி ஜாமீன் வழங்கியது. ஏன் அங்கு வாதங்களை வைக்க வில்லையா? பல்வேறு குற்றங்கள் முறைகேடுகள் உள்ள நிலையில் அவர் ஜாமீனில் சென்றால் அவரிடம் உள்ள சொத்துக்களை எப்படி பறிமுதல் செய்ய முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி திருப்பி செலுத்துவது என்று விசாரணை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருப்தி இல்லை. முறையான விசாரணை மேற்கொண்டால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |