Categories
மாநில செய்திகள்

சிறுமிக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்கு…. மேல்முறையீடு செய்த குற்றவாளி…. ஐகோர்ட்டின் அதிரடி முடிவு….!!

தமிழகத்தில் பொள்ளாச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 5 ஆம் வகுப்பு மாணவிக்கு ரூபன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று ‘போக்சா’ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த கோவை மகளிர் கோர்ட் ரூபனுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து ரூபனுக்கு விதித்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரூபன் மேல்முறையீடு செய்து நீதிபதி பி.வேல்முருகன் முன் இவ்வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது ரூபன் தரப்பிலிருந்து ஆஜரான வக்கீல், மனுதாரர் வாடகை வாகன டிரைவராக உள்ளதால் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும்அன்று  ரூபன் பழனியில் இருந்தார். எனவே சம்பவத்தை பார்த்ததாக நேரடி சாட்சிகள் யாரும் இல்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமி சாட்சியத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி உள்ளார். இதனால் சம்பவ இடத்தில் சிறுமியை தவிர சாட்சிகள் இல்லாத நிலையில் மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட்டது தவறு என்று வாதிட்டார்.

அதனை தொடர்ந்து போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல்,குழந்தையின் சாட்சி தெளிவாக உள்ளது என்று அவர் வாதிட்டார். அதன்பிறகு இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறுமிகளின் அறியாமை மற்றும் தனிமையை பயன்படுத்திக்கொள்ளும் குற்றவாளிகள் இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தவிர வேறு சாட்சியங்களை எதிர்பார்க்க முடியாது என்று கூறினார். இதையடுத்து இந்த வழக்கை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட சிறுமி வாக்குமூலம் தெளிவாகவும் மற்றும் நம்பிக்கையாகவும் உள்ளது என்று தீர்ப்பளித்தார். மேலும் சிறுமியின் வாக்கு மூலத்தை ஏற்றுக்கொண்டு கோவை கோர்ட் மனுதாரருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |