பாரதி கண்ணம்மா சீரியலின் கண்ணம்மா வேடத்தில் புதிதாக நடிக்க இருப்பவர் புகைப்படம் வெளியாகியுள்ளது.
”பாரதிகண்ணம்மா” சீரியல் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று. இந்த சீரியலில் பாரதி என்னும் கதாபாத்திரத்தில் அருண்பிரசாத் நடித்து வருகிறார். கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷ்னி ஹரிப்ரியன் நடித்து வந்தார்.
இதனையடுத்து, ரோஷினி ஹரிப்ரியன் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், இதற்கு காரணம் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த காரணத்தினால் இவர் விலகுவதாகவம் கூறப்பட்டது.
இந்நிலையில், கண்ணம்மா வேடத்தில் நடிக்கப் போகும் நடிகையின் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி, யாரடி நீ மோகினி போன்ற தொடர்களில் நடித்த நடிகை இத்தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு ரோஷினி விலகுகின்றார் என்று இதுபோன்ற தகவல்கள் வெளிவந்தாலும் இதுவரை அதிகாரபூர்வமாக எந்த தகவலும் யாரும் வெளியிடவில்லை என்பதால், இந்த தகவல் உண்மைதானா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.