Categories
உலக செய்திகள்

“பருவநிலை மாநாடு” ராணியார் கலந்துகொள்வாரா…? பிரித்தானிய அரண்மனையின் விளக்கம்…!!

கிளாஸ்கோவில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் ராணியார் இரண்டாம் எலிசபெத் கலந்துகொள்ள மாட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனையானது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரித்தானிய ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த வாரத்தில் ஒரு நாள் மருத்துவமனையில் தங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது கிளாஸ்கோவில் நடைபெற இருக்கும் பருவநிலை மாநாட்டினில் ராணி கலந்துகொள்வதாக இல்லை என பக்கிங்ஹாம் அரண்மனையானது தெரிவித்துள்ளது. இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது “ராணி  நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதனை கருத்தில் கொண்டு நவம்பர் 1-ஆம் தேதி கிளாஸ்கோவில் நடைபெற உள்ள பருவநிலை மாநாட்டில் ராணியார் கலந்துகொள்ள மாட்டார்” என தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துகொள்ள இயலாத நிலையில், இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மகன் இளவரசர் வில்லியம் ஆகியோர் தங்கள் மனைவியுடன் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

Categories

Tech |