Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இன்றைய போட்டியில் வெற்றி யாருக்கு….? இங்கிலாந்து VS வங்காளதேசம் இன்று மோதல் …!!!

டி20  உலக கோப்பை போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் இன்று மாலை நடைபெறும் குரூப்-1 பிரிவில் இங்கிலாந்து-வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டி குறித்து இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பட்லர் கூறும்போது,” வங்காளதேச அணி ஆபத்தான அணியாக உள்ளது .ஆனால் நாங்கள் ஒரு குழுவாக நம்பிக்கையுடன் இருக்கிறோம் .வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் தவறுகள் நடக்க இடமில்லை “என்று கூறினார் .

மேலும் சர்வதேச டி20 போட்டியில் இவ்விரு அணிகளும் முதன்முறையாக இன்றைய போட்டியில் மோத உள்ளன.ஆனால் ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் பல முறை மோதியுள்ளன. இதனிடையே இப்போட்டி குறித்து வங்கதேச அணியின் வேகப்பந்து பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் கூறும்போது,” இங்கிலாந்து அணி பவுலர்கள் எப்போதும் விக்கெட் எடுப்பதில் கவனம் செலுத்துவார்கள் .அதேபோல் பேட்ஸ்மேன்கள் ரன் எடுப்பதில்  கவனம் செலுத்துவார்கள். இதன் மூலம் எதிரணி பந்துவீச்சாளர்களை அழுத்தத்தை வைத்திருப்பார்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச வீரர்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் “என்று அவர் அறிவுரை வழங்கியுள்ளார் .இந்திய நேரப்படி போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் தொடங்க உள்ளது.

Categories

Tech |