முல்லை பெரியாறு அணையில் நீரின் அளவு அபாய கட்டத்தில் இல்லாத போது இந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவில் பல்வேறு வதந்திகள் பரவி வருவது பெரும் கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும், இது போன்று வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் அணை தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், நீரில் அளவில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என்று கூறினார். இதையடுத்து முல்லைப் பெரியாறு வழக்கில் வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்
Categories