Categories
அரசியல் மாநில செய்திகள்

பரவாயில்லையே…! சூப்பரா ஜெயிச்சுட்டீங்க…. விஜய் போட்ட உத்தரவு …!!

மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்கத்தினர் செய்து கொடுக்க வேண்டும் என நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் பல இடங்களில் வெற்றிபெற்று பிரதான அரசியல் கட்சிகளுக்கு சவாலை உண்டாக்கியது. தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் அறிவுரைகளை வழங்கியதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் இயக்கம் களமிறங்கும் என தெரிகின்றது. இது தொடர்பாக பேசிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி,

உள்ளாட்சித் தேர்தலில் தளபதி மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த அனைத்து தமிழ்நாடு மக்களுக்கு தளபதி சார்பாக எங்களுடைய நன்றிகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். 129 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஊராட்சி மன்ற தலைவர் இரண்டு பேர், துணைத்தலைவர் 12 பேர் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மீதி எல்லாரும் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே தளபதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அவர்களுக்கு தளபதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகளிடம் கொண்டு சென்று தேவையான உதவிகளை மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். அதனடிப்படையில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தளபதி மக்கள் இயக்கம் சார்பாக அவர்கள் செய்வார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

தளபதி அவர்களை சந்தித்து எல்லாமே வாழ்த்து பெற்றார்கள்.  எல்லாரோடும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். வெற்றி பெற்றவர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களிடம் வெற்றிபெற்றது எப்படி ? மக்களை நீங்கள் எப்படி போய் அணுகுனீர்கள் ? என்பதை தளபதி விஜய் கேட்டறிந்தார் என தெரிவித்தார்.

Categories

Tech |