Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னப்பா இது…! என்கிட்ட பணமே இல்ல…. “ஆடு” மட்டும் தான் இருக்கு…. அண்ணாமலை வருத்தம்…!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியதாக கூடி பிஜிஆர் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் பத்து நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படி தவறினால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு பதில் அளித்து பதிவிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் சில ஆடுகள் மட்டும்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும் பிற அமைச்சர்களை போல ஊழல் செய்து கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை என்றும், நீதிமன்றங்களின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது சந்திப்போம் என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முறைகேடுகளை முன்வைத்த நிலையில், பிஜிஆர் நிறுவனத்திற்கு மின்வாரியம் சலுகையை வழங்கி உள்ளதாகவும் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |