நாடு முழுதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் 9 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் நவம்பர் 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் என்ற அம்மாநில அரசு அறிவித்துள்ளது.