புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதல்வர் முக ஸ்டாலின் இதை தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பதவி உயர்வு பெறும் அரசு பணியாளர்களுக்கும் சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி தரப்படும் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் பவானிசாகர் பயிற்சி மையத்தில் இருந்து அதிகாரிகள் சென்று பயிற்சி வழங்கவும், பதவி உயர்வு பெறும் அரசு பணியாளர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.