அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வெளியாவதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று அயோத்தி சர்சை இடம் யாருக்கு என்பது குறித்த வழக்கை விசாரித்து இன்று அதற்கான இறுதி தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
சர்ச்சைக்குரிய நிலத்திற்கு ராம ஜென்மபூமி , நிர்மோகி அகோரா , சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று அமைப்புகளும் உரிமை கூறும் இந்த வழக்கில் முதல் தீர்ப்பு 2010 ஆம் ஆண்டு வெளியானது. வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளுக்கும் சரிசமமாக பகிர்ந்து அளிக்க உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கலான மேல்முறையீட்டு மனுக்கள் தினசரி அடிப்படையில் விசாரிக்கப்பட்டதால் 40 நாட்கள் இந்த வழக்கின் விசாரணை முடிவு பெற்றதை அடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறுவதால் முன்னதாகவே தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் தீர்ப்பை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் அமைதி காக்க சமயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.இதையடுத்து இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகுமென்று நேற்று உச்சநீதிமன்றம் தெரிவிதத்தது. இதனிடையே இன்று காலை தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் 30 நிமிடம் வாசித்த பின்பு அயோத்தி நிலம் இந்துக்களுக்கே என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.