Categories
உலக செய்திகள்

பிரபல தமிழ் வர்த்தகரின் வீட்டில்…. கைவரிசை காட்டிய 3 பேர்…. வெளியான சி.சி.டி.வி காட்சி….!!

பிரபல தமிழ் வர்த்தகரின் வீட்டில் கார் திருடப்பட்ட சம்பவத்தின் சி.சி.டிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

பிரிதானியாவின் தலைநகரமான லண்டனின் லூசியம் பகுதியில் உள்ள பிரபல தமிழ் வர்த்தகர் தன்னுடைய காரை விற்பதற்காக இணையத்தில் பதிவு செய்தார். இந்த விளம்பரத்தை பார்த்த 3 பேர் காரை பார்க்கவேண்டும் என்று வர்த்தகரை தொடர்பு கொண்டுள்ளனர்.

அதன்படி அவர் வீட்டிற்கு வந்த 3 பேர் தெளிவாக காரின் மேலதிக சாவியை எடுத்துவிட்டு தாங்கள் கொண்டுவந்த சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அதே பகுதிக்கு இரவு நேரத்தில் வந்த அவர்கள் 3 பேரும் அந்த சாவியை பயன்படுத்தி காரை திருடிச் சென்றனர். இதுகுறித்த சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது.

Categories

Tech |