Categories
உலக செய்திகள்

“ஈராக்கில் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்!”.. 11 பேர் உயிரிழப்பு..!!

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் 11 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஈராக்கில் உள்ள கிழக்கு தியாலா என்ற மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு பெண் உட்பட சுமார் 11 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 13-க்கும் அதிகமான நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஐ.எஸ் தீவிரவாதிகள், கிராமத்திற்குள் வாகனங்களில் நுழைந்துள்ளனர். அதன்பின்பு, அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |