Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சீக்கிரம் நிரப்புங்க…. லேப் டெக்னீசியன்களின் போராட்டம்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை…!!

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி லேப் டெக்னீசியன்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் டிப்ளமோ லேப் டெக்னீசியன்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் லேப் டெக்னீசியன் நிலை 2 பணியிடங்களில் 524 பேர் மட்டுமே நேரடி நியமனம் பெற்றுள்ளனர். இது பதவி உயர்வு அடிப்படையில் வழங்கப்பட்டதால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எனவே போர்க்கால அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் தமிழகம் முழுவதும் காலியாக இருக்கும் லேப் டெக்னீசியன் பணியிடங்களை கண்டறிந்து அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனையடுத்து பாரா மெடிக்கல் கவுன்சிலை விரைந்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |