தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி வங்கி உயரதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகை கடன் விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தேவிகாபுரத்தில் கூட்டுறவு நகர வங்கி யில் தணிக்கை குழுவினர் நகை கடன் பற்றி ஆய்வு மேற்கொண்டபோது கவரிங் நகைகள் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த கவரிங் நகைகளுக்கு 2,39,00,000 நகை கடன் வழங்கியது தெரியவந்தது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆரணி கூட்டுறவு நகர வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு வங்கி மேலாண்மை இயக்குனர் கல்யாண் குமார் என்பவரை பணியிட மாற்றம் செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் வங்கி மேலாளர் லிங்கப்பா மற்றும் ஊழியர்கள் சரவணன் மற்றும் ஜெகதீஸ் ஆகியோர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.