Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தினமும் குடி… “அண்ணனிடம் சண்டை போட்ட தம்பி”… பின் நடந்த பயங்கரம்!!

குடித்து  விட்டு தகராறு செய்த தம்பியை அண்ணண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ..

கோவை  மாவட்டத்தில்   உள்ள   தெற்கு   உக்கடம்   பகுதியில்    எஸ். எச். காலனி   அமைந்துள்ளது.   அந்த   காலனியில்   முத்தான்   என்ற   செல்வராஜ் (40)  வசித்து   வருகிறார்.   இவருக்கு   குடிப்பழக்கம்   உள்ளது,   இறைச்சிக்   கடையில்   வேலை   பார்த்து   வருகிறார். இவருக்கு   (52)  வயதில்   சுப்ரமணியம்   என்ற   அண்ணன்   இருக்கிறார் ,  இவரும்   அதே   காலனியில்   வசித்து   வருகிறார். தம்பி செல்வராஜ்  தினமும்   குடித்துவிட்டு   குடும்பத்தினரிடமும்,  அண்ணனிடமும்  தகராறு   செய்து வந்துள்ளார் .

இந்நிலையில்    செல்வராஜ்    நேற்று   இரவு   அதேபோல்   குடித்துவிட்டு   எட்டு   மணி   அளவில்   சுப்பிரமணியின்   வீட்டிற்கு   சென்றுள்ளார்.  அங்கு இருந்த அவர் அண்ணன்  சுப்பிரமணியிடம்    தகராறு   செய்துள்ளார்,   இதனால்   ஆத்திரமடைந்த   சுப்பிரமணி   செல்வராஜை சரமாரியாக   தாக்கியதில்   அவர்   கீழே   விழுந்துள்ளார்.  அப்போது   சுப்பிரமணி   அங்கிருந்த   நைலான்   கயிற்றை   எடுத்து   செல்வராஜின்   கழுத்தை   இறுக்கி   கொலை   செய்தார்.

பின்னர்   அவர்   இதுபற்றி   சி. எம். சி   காலனியில்   வசிக்கும்   அவரது   சகோதரிக்கு    செல்போனில்   செல்வராஜ்   குடிபோதையில்   விழுந்து   கிடப்பதாக   தகவல்   தெரிவித்துள்ளார்.   சகோதரர்கள்   மற்றும்   உறவினர்கள்   நேரில்   வந்து   பார்க்கும்போது   கண்   மற்றும்  கழுத்தில்   காயங்கள்   இருப்பதை   பார்த்த   அவர்கள்   உக்கடம்   போலீசாருக்கு   தகவல் தெரிவித்துள்ளனர்.   தகவலறிந்து   விரைந்து   வந்த   இன்ஸ்பெக்டர்   சக்திவேல்   மற்றும்   போலீசார் விசாரணை  செய்தனர். போலீசார்   விசாரித்த   பொழுது   தம்பி   செல்வராஜை  அவரது   சகோதரர்   சுப்பிரமணி   கொலை   செய்தது   தெரியவந்துள்ளது.

இதற்கிடையே  சுப்பிரமணி  தலைமறைவாகிவிட்டார்.  போலீசார்   அவரை   தொடர்ந்து   தேடி  வந்த நிலையில், இறுதியில்  பிடித்தனர் . பிடித்து   அவரை  விசாரித்ததில் சுப்பிரமணி பிரியாணி   மாஸ்டராக   வேலை   பார்ப்பது  தெரியவந்தது.  தொடர்ந்து   அவரிடம்    விசாரணை   நடத்தி   வருகின்றனர். கொலை செய்யப்பட்ட செல்வராஜுக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |