திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே பழங்குடியின பெண்ணிற்கு பாலியல் தொல்லையளித்த வனக்காவலர் கைது செய்யப்பட்டார்..
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே பெரணமல்லூர் பகுதியில் வசித்து வரும் பழங்குடியின பெண் மற்றும் அந்தப் பெண்ணின் சகோதரி இருவரும் விறகு வெட்டும் கூலி வேலைக்காக வாழ்குடை கிராமம் காட்டுப் பகுதியின் வழியாகச் சென்றுள்ளனர் ,அப்போது அங்கு உள்ள ஆரணி சரக வன காவலர் செல்வராஜ் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
அவர் தவறாக நடக்கும் போது அந்தப் பெண் தான் மறைத்து வைத்திருந்த செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் ஆதாரத்துடன் காவல் நிலையத்திற்கு சென்று அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வராஜை கைது செய்துள்ளனர். பின்னர் விசாரணையில் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பது தெரியவந்துள்ளது.