தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 16000சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டயர்களை கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல் வெளியானதற்கு போக்குவரத்து துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையின்போது அனைத்து தடப் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளை சீராக இயக்க முடியும் என்றும் போக்குவரத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.