பாகிஸ்தானிற்கு 22.5 ஆயிரம் கோடி பொருளாதார நிதி வழங்குவதாக சவுதி அரேபியா தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் மற்றும் சர்வதேச நாணவியல் கழகம் இணைந்து கடந்த 2019 ஆம் வருடத்தில் 600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தங்கள் செய்தது. எனினும் அதன் பின்பு அந்த ஒப்பந்தம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் சர்வதேச நாணவியல் கழகம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாகிஸ்தானிற்கு, சவுதி அரேபியா சுமார் 300 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கியில் இந்த நிதி வரவு வைக்கப்படும் என்றும் மேலும், 102 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய பெட்ரோலிய வணிகத்திற்கும் கடனாக நிதி வழங்கப்படும் என்றும் சவுதி அரேபியா கூறியிருக்கிறது.
கடந்த 2018 ஆம் வருடத்தில் சவுதி அரேபியா 300 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி உதவி மற்றும் அந்நிய செலவாணி கையிருப்பிற்காக 300 கோடி அமெரிக்க டாலர்களும் கொடுத்திருந்தது. அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மோதல் இருந்ததால், அந்த 200 கோடி அமெரிக்க டாலர்களை பாகிஸ்தான் அரசு திருப்பி அனுப்பிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.